நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மண் அள்ளும் போது, எதிர்பாராத விதமாக 30 அடி பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், பெண் கூலித்தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.
தச்சங்காடு பகுதியை சேர்ந்த விஜயராகவன் என்பவரது தோட்டத்தில் இருந்து மண் அள்ளிய பின், பள்ளத்தில் இருந்து மேலே சென்ற டிராக்டர் அதிக பாரம் காரணமாக பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஓட்டுநரின் அஜாக்கிரதையால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.