இந்தியாவைத் தவிர ஆகஸ்ட் 15-ல் சுதந்திர தினம் கொண்டாடும் பிற நாடுகள்! – ஒரு பார்வை

இந்தியாவைப்போன்றே, இன்னும் சில நாடுகள் பிரிட்டிஷ், பிரெஞ்சு ஆட்சியாளர்களிடமிருந்து ஆகஸ்ட் 15-ல் சுதந்திரம் பெற்றிருக்கின்றன.

இந்தியா, காங்கோ குடியரசு, தென் கொரியா, வட கொரியா, பஹ்ரைன், லிச்சென்ஸ்டைன் என மொத்தம் 6 நாடுகள் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றன.

பஹ்ரைன்

பஹ்ரைன்:

தில்முன் நாகரிகத்தின் பண்டைய நிலமாக அறியப்படும் பஹ்ரைன், ஐ.நா சபை நடத்திய பஹ்ரைன் மக்கள்தொகை ஆய்வின்படி, பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்களிடமிருந்து 1971, ஆகஸ்ட் 15-ல் சுதந்திரம் பெற்றது.

காங்கோ

காங்கோ குடியரசு:

1880-ல் பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்த மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் காங்கோ-வும் ஒன்று. முதலில் பிரெஞ்சு காங்கோ என்று அறியப்பட்ட காங்கோ, 1960 ஆகஸ்ட் 15 அன்று பிரெஞ்சு காலனி ஆட்சியாளர்களிடமிருந்து முழு சுதந்திரம் பெற்றது.

வட கொரியா

வட கொரியா, தென் கொரியா:

கொரியாமீதான ஜப்பானின் காலனித்துவ ஆட்சி, இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா, சோவியத் படைகள் மூலம் 1945, ஆகஸ்ட் 15-ல் முடிவுக்கு வந்தது. அதன்படியே இருநாடுகளும் ஆகஸ்ட் 15-ல் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றன.

தென் கொரியா

தென் கொரியா அதிகாரபூர்வமாக கொரியா குடியரசு என்றும், வட கொரியா அதிகாரப்பூர்வமாகக் கொரியா ஜனநாயக மக்கள் குடியரசு என்றும் அழைக்கப்படுகின்றன.

லிச்சென்ஸ்டைன்

லிச்சென்ஸ்டைன்:

உலகின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றான லிச்சென்ஸ்டைன், 1866-ம் ஆண்டு ஜெர்மன் ஆட்சியிலிருந்து முழுமையாகச் சுதந்திரம் பெற்றது. அதைத் தொடர்ந்து லிச்சென்ஸ்டைன் மாகாண அரசு, 1940-லிருந்து ஆகஸ்ட் 15-ம் தேதியை தேசிய தினமாகக் கொண்டாடி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.