'ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்து அரசியல் பேசியதில் தவறில்லை – ஏன் தெரியுமா?' – சீமான் விளாசல்

தமிழக ஆளுநரை சந்தித்து  நடிகர் ரஜினி அரசியல் பேசியதில் தவறில்லை, யார் வேண்டுமானாலும் ஆளுநரை சந்தித்து அரசியல் பேசலாம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மாலை முரசு நிறுவனர் பா. ராமச்சந்திர ஆதித்தனாரின் 88வது பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள  மாலை முரசு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் அவரது திருவுருவப் படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், ”ஆளுநர் ஆர்.என்.ரவியை நியமித்தது யார் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் தானே?. அப்பொழுது அது சார்ந்து நிகழ்வுகளும் அதை சார்ந்த தலைவர்களும்தானே அவர் சந்திப்பார். அரசியல் என்பது ஒரு வாழ்வியல், அனைத்து இடங்களிலும் அரசியல் பேச வேண்டும் என எப்பொழுது சொல்கிறார்கள்; அப்பொழுதுதான் நாடு உருப்படும். நடிகர் ரஜினிகாந்த்  ஆளுநரை சந்தித்து அரசியல் பேசியதில்  தவறில்லை யார் வேண்டுமானாலும் ஆளுநரை சந்தித்து அரசியல் பேசலாம் எனக் கூறினார்.

அரசியல் பேசாதவன் மனிதராக இருக்க முடியாது என்கிறார் காந்தி, மனிதனின் உரிமைக்காக பேசும் அனைத்தும் அரசியல் தான். அந்த உரிமை ரஜினிகாந்திற்கு இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் ஆளுநரை நியமித்துள்ளார்கள். பிறகு ஏன் ஆளுநர் அரசியல் பேசக்கூடாதா? மேலும் ஆளுநருடன் அரசியல் பேச வேண்டிய அவசியம் எனக்கில்லை.

image
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் போராட்டத்தை திணித்தது யார்? நிர்வாகத்தின் மீது தவறு இல்லை என்றால் இப்பொழுது எப்படி நிர்வாகத்திற்க்கு தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். போராட்டத்திற்கு பிறகு தானே நடவடிக்கை எடுத்துள்ளார்கள். இப்பொழுதுதான் 4ஜி பிஎஸ்என்எல்-க்கு கொடுத்துள்ளீர்கள்: 5ஜியை முதலாளிகளுக்கு கொடுத்துள்ளார்கள்.
சுதந்திர தினத்தன்று எல்லாருக்கும் வீடு இருக்கும் என்று கூறினீர்களே வீட்டை காட்டுங்கள். ஒரு துணியில் கொடியை ஏற்றி விட்டால் நாட்டுபற்று வந்துவிடுமா? மின்சார சட்ட திருத்தம் பேராபத்தானது. அத்தியாவசிய பயன்பாடான மின்சாரத்தை தனியாருக்கு கொடுப்பதா? உங்களுக்கென்று சொந்தமாக விமானம் இருக்கிறதா? எதற்கு ஏர்போர்ட்? 4500 ஏக்கரில் ஏர்போர்ட் கட்டினாலும் அதையும் தனியாருக்கு தான் கொடுக்கப் போகிறீர்கள்” என்றார்.

இதையும் படிக்க: சோழர்களின் அரண்மனைகள் குறித்த ஜெ.மோ.வின் சர்ச்சை கருத்து- பதிலளித்த நெட்டிசன்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.