வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பியோங்யாங்: கோவிட்டிற்கு எதிரான போரை வெற்றிகரமாக எதிர்கொண்டுவிட்டோம் என வடகொரியா அறிவித்துள்ளது. அதே நேரம் அந்நாட்டு அதிபர் கிம்ஜோங் உன் கடுமையாக காய்ச்சலால் அவதியுற்றுவருவதாகவும் அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.
முதல் உலகம் முழுவதும் சுமார் 58.6 கோடி மக்கள் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 64.2 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். கோவிட் தொற்றினை எதிர்கொள்வதில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வெற்றிகரமாக கையாண்ட நிலையில், வடகொரியா தனது தன் பாணியில் நடவடிக்கை எடுத்தது. பாதிப்பு எண்ணிக்கையை வெளிப்படையாக உலகிற்கு காட்டவில்லை. மாறாக கோவிட் பாதிப்பு என்று குறிப்பிடாமல் ”காய்ச்சல்’ என கோவிட் பாதிப்பை மறைமுகமாக வடகொரியா குறிப்பிடுகிறது.
இந்நிலையில்,வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரியும், அதிபருக்கு அடுத்து இரண்டாவது அதிகாரம் மிக்க தலைவராக வரவிருக்கும் ”கிம் யோ ஜோங்க்” அரசு ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் அறிவித்துள்ளதாவது: கோவிட் பாதிப்பை வட கொரியா வெற்றிகரமாக தாண்டி வந்துள்ளது.இந்த பாதிப்பின் போது அதிபர் கிம் ஜோங் உன் கடும் காய்ச்சலுக்கு ஆளானர். இருப்பினும் உலக சுகாதார வரலாற்றில் ஒரு அதிசயத்தை வட கொரியா நிகழ்த்தி காட்டியது. நமது வெற்றி என்பது வரலாற்று வெற்றியாகும். நம் நாட்டில் கொரோனா பரவலை திட்மிட்டே தென் கொரியா ஏற்படுத்தியது. இதற்கு அந்நாட்டிற்கு வட கொரியா தக்க பதிலடி தரும் என்றார்.
கிம் ஜோங் உன்னிற்கு கோவிட்?
இந்நிலையில் கடும் காய்ச்சலால் கிம் ஜோங் உன் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த இரு வாரங்களாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்வில்லை. இதனால் கிம் ஜோங் உன் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வந்தது. இதனை மறுத்த அதிபர் அலுவலக வட்டாரம். கிம்ஜோங் உன்னிற்கு ஏற்கனவே இருதய பாதிப்பு உள்ளது. உடல் எடை அதிகம், தொடர்ச்சியாக புகைபிடிக்கும் பழக்கம் ஆகிய காரணங்களால் அவர் பாதிப்பில் உள்ளார் என தெரிவித்துள்ளார்.
கிம் ஜோங் உன் அறிக்கை
முன்னதாக கிம் ஜோங் உன் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, வடகொரியாவில் கடந்த இரண்டு வாரங்களாக புதிய பாதிப்பும் கண்டறியப்படவில்லை. இத்தொற்றுக்கு எதிராக நாம் ‘மிளிரும் வெற்றி’ பெற்றுள்ளோம். இவ்வாறு அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement