எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு…

சென்னை: எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற டெண்டர் முறைகேடு தொடர்பாக அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்த நிலையில், சென்னை உயர்நீதி மன்றமும் தடை விதிக்க மறுத்துள்ளது.

தன்மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி எஸ்.பி.வேலுமணி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இம்மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது டெண்டர் முறைகேடு தொடர்பாக எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கிற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

டெண்டர் முறைகேடு: எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கிற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.