பல நாட்கள் இருளில் மூழ்கலாம்… கடும் நெருக்கடி: பிரித்தானிய மக்களுக்கு அறிவுறுத்தல்


*ஜனவரியில் கடும் நெருக்கடிக்கு உள்ளாகும் சம்பவம் ஏற்படலாம், தொடர் மின்வெட்டுகளுக்கு வாய்ப்புகள் அதிகம்

*உணவு மற்றும் தொடர்புடைய தொழிற்சாலைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, நெருக்கடி ஏற்பட்டால் எதிர்கொள்ள திட்டம் வகுக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் எதிர்வரும் குளிர்காலத்தில் பல நாட்கள் திட்டமிடப்பட்ட மின்வெட்டுகள் ஏற்படலாம் எனவும், இது மருத்துவமனைகள், ரயில் சேவைகள் என பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள அங்காடிகளில் அலமாரிகளை காலியாக வைத்திருக்க வேண்டாம் எனவும், மருத்துவமனைகள் தவறாமல் டீசல் சேமித்து வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பல நாட்கள் இருளில் மூழ்கலாம்... கடும் நெருக்கடி: பிரித்தானிய மக்களுக்கு அறிவுறுத்தல் | Winter Blackouts Planned Power Cuts

@shutterstock

எதிர்வரும் ஜனவரியில் கடும் நெருக்கடிக்கு உள்ளாகும் சம்பவம் ஏற்படலாம் எனவும், தொடர் மின்வெட்டுகளுக்கு வாய்ப்புகள் அதிகம் எனவும் தெரிவித்துள்ளனர்.
கடும் குளிர் காலநிலை மற்றும் எரிவாயு பற்றாக்குறையால், பிரித்தானியா முழுவதும் வணிகங்கள் மற்றும் வீடுகளில் கடும் நெருக்கடி ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் ரயில் சேவைகள், நூலகங்கள், அரசு கட்டிடங்கள் என அனைத்தும் பாதிப்புக்கு உள்ளாகும்.
ஆனால் இப்படியான சூழலுக்கு வாய்ப்புகள் மிக மிக குறைவு என்றே நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் உணவு மற்றும் அதன் தொடர்புடைய தொழிற்சாலைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, இப்படியான நெருக்கடி ஏற்பட்டால் எதிர்கொள்ள திட்டம் வகுக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பல நாட்கள் இருளில் மூழ்கலாம்... கடும் நெருக்கடி: பிரித்தானிய மக்களுக்கு அறிவுறுத்தல் | Winter Blackouts Planned Power Cuts

@BBVA

மின்வெட்டு அச்சுறுத்தல் ஒருபக்கம் என்றால், திருத்தப்பட்ட எரிசக்தி கட்டணமானது 4,000 பவுண்டுகளை எட்டும் என்றே தெரியவந்துள்ளது.
மேலும், இதே நிலை நீடிக்கும் எனில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் எரிசக்தி கட்டணமானது 4,400 பவுண்டுகளை எட்ட வாய்ப்பிருப்பதாக தனியார் நிறுவனம் ஒன்று கணித்துள்ளது.

தற்போது 1971 பவுண்டுகளாக இருக்கும் எரிசக்தி கட்டணமானது அக்டோபர் மாதம் 3,582 பவுண்டுகளாக அதிகரிக்கலாம் எனவும், இதுவே ஜனவரி மாதத்தில் 4,266 பவுண்டுகள் என வசூலிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

உக்ரைனில் நடக்கும் போரின் விளைவாக, இயற்கை எரிவாயுவின் விலை ஏற்றம் காரணமாக, சமீபத்திய மாதங்களில் எரிசக்தி கட்டணங்கள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.