இந்தியாவுக்கு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திரம் வழங்கப்பட்டதன் சுவாரஸ்யப் பின்னணி!

இந்தியா 75-வது சுதந்திர தினத்தை வருகிற 15-ம் தேதி கொண்டாடவிருக்கிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தினத்தை கொண்டாட நாடு முழுவதும் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்துவருகின்றன.

சுதந்திர தின விழா

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, ஆகஸ்ட் 15, 1947-ல் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் மூவர்ணக்கொடியை ஏற்றினார். இதைத் தொடர்ந்து, ஒவ்வோர் ஆண்டும் ஆக்ஸ்ட் 15-ல் இந்தியப் பிரதமரால் செங்கோட்டையில் கொடியேற்றப்பட்டு வருகிறது.

ஜவஹர்லால் நேரு

இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க ஆங்கிலேய அரசு முடிவுசெய்து அதன் பொறுப்பை கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் ஒப்படைத்தது.

மவுண்ட்பேட்டன் பிரபு

(பீரிடம் அட் மிட் நைட்) Freedom at Midnight எனும் புத்தகத்தில் இந்தியாவுக்கான சுதந்திரம் வழங்கிய தேதி பற்றி மவுண்ட்பேட்டன் பிரபு கூறிய விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தேசிய கொடி

மவுண்ட் பேட்டன் (பீரிடம் அட் மிட் நைட்) Freedom at Midnight என்ற புத்தகத்தில், ‘இந்தியாவுக்கு ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் சுதந்திரம் வழங்க நினைத்தேன். அதையடுத்து ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திரம் வழங்க முடிவு செய்தேன். ஆனால் அதை மக்கள் விரும்பவில்லை’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஏனென்றால் அன்றுதான் இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்த 2-ம் ஆண்டு நினைவு நாளாகும். ஆனால், குண்டு வீச்சு தொடர்பான நாளன்று சுதந்திரம் வழங்குவதை சில மக்கள் விரும்பவில்லை அவர் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

முதலில் அந்த நாள் அபசகுணமாக பார்க்கப்பட்டது. மேற்கத்திய முறைப்படி, நள்ளிரவு 12 மணிக்கு சுதந்திரம் அறிவிக்கப்பட்டதால், இந்தியாவில் அது நல்ல நாளாக அமைந்துவிட்டது எனத் தெரிவிக்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.