கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் இறுதி ரந்தோலி பெரஹர இன்று (11) இரவு வீதி உலா வந்ததுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பெரஹரவை பார்வையிட்டார்.
இச்சந்தர்ப்பத்தில் நீதிமன்றங்கள், சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க, மத்திய மாகாண முன்னாள் ஆளுநர் சரத் ஏக்கநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2022-08-11