சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோ G62 5ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா நிறுவனம். அண்மைய காலமாக வரிசையாக பல்வேறு ஸ்மார்ட்போன்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் புது போன்களை மோட்டோ விற்பனைக்கு களம் இறக்கி வருகிறது.
அந்த வகையில் அந்நிறுவனத்தின் G சீரிஸ் வரிசையில் G62 5ஜி ஸ்மார்ட்போன் இப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
- ஃபுல் ஹெச்.டி ரெசல்யூஷனில் இயங்கும் 6.55 இன்ச் திரை அளவு கொண்ட ஐபிஎஸ் எல்.சி.டி டிஸ்பிளே இதில் இடம்பெற்றுள்ளது.
- IP52 டஸ்ட் மற்றும் வாட்டர் புரொடக்ஷனை இந்த போன் கொண்டுள்ளது.
- ஸ்னாப்டிராகன் 695 SoC சிப்செட் இந்த போனில் இடம் பெற்றுள்ளது.
- ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் இந்த போன் இயங்குகிறது. மூன்று ஆண்டுகளுக்கு இயங்குதள அப்டேட்டையும் இந்த போன் பெற்றுள்ளது.
- பின்புறத்தில் மூன்று கேமரா இடம் பெற்றுள்ளது. அதில் பிரதான கேமரா 50 மெகாபிக்சலை கொண்டுள்ளது.
- சென்சார் அம்சம் கொண்ட 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் இடம் பெற்றுள்ளது.
- 5000mAh பேட்டரி இந்த போனில் உள்ளது.
- 6ஜிபி ரேம்+128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.17,999-க்கும், 8 ஜிபி ரேம்+128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.19,999-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- விலையில் அறிமுக சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Become the #UnstoppableYou with all new #motog62 starting at just ₹16,249* (incl. offers) with blazing-fast features. Sale starts 19 August on @Flipkart!
— Motorola India (@motorolaindia) August 11, 2022