நியூயார்க்:இந்திய மக்களில், 7.3 சதவீதம் பேர், ‘கிரிப்டோ கரன்சி’ எனப்படும், மெய்நிகர் நாணயங்கள் வைத்துள்ளனர். இதன் வாயிலாக, சர்வதேச அளவில் இந்தியா 7வது இடம் வகிக்கிறது.
கிரிப்டோகரன்சி எனப்படும் மெய்நிகர் நாணயங்கள் வைத்துள்ள நாடுகள் குறித்து, ஐ.நா.,வின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு அறிக்கை வெளியிட்டது. அதன் விபரம்:
கடந்த 2021ம் ஆண்டில் கிரிப்டோகரன்சி வைத்துள்ள நாடுகளின் பட்டியலில், 15 நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. இதில், கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் முன்னிலை வகிக்கிறது. இங்கு வசிக்கும் 12.7 சதவீத மக்கள் கிரிப்டோகரன்சி வைத்துள்ளனர்.ரஷ்யாவில் 11.9 சதவீதமும், தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் 10.3 சதவீதமும், சிங்கப்பூரில் 9.4 சதவீத மக்களும் கிரிப்டோகரன்சி வைத்துள்ளனர்.
அமெரிக்காவில், 8.3 சதவீத மக்கள், ‘டிஜிட்டல்’ கரன்சி வைத்துள்ளனர். இந்த பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் உள்ளது. நம் நாட்டில், 7.3 சதவீதம் பேர் மெய்நிகர் நாணயம் வைத்துள்ளனர்.கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் இருந்த காலத்தில், கிரிப்டோ கரன்சியின் பயன்பாடு உலக அளவில் அதிகரித்துள்ளது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement