கள்ளக்குறிச்சி கணியமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் டூ படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி கடந்த ஜூலை 13ஆம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து CBCID விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கடந்த 17ஆம் தேதி பள்ளி பேருந்துகள் மற்றும் பள்ளி கட்டிடங்களை அடித்து உடைத்து பலர் கலவரத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தற்போது கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவியின் வீட்டிற்கு சென்று அவரது தாய் செல்வியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். அந்த குற்றவாளி எவ்வளவு பெரிய கொம்பனா இருந்தாலும் தண்டனை நிச்சயம் கிடைக்கும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு தாயின் வேதனையை புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களுக்கு கட்டாயம் நீதி கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.