புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் சிறையில் இருந்த நிலையில், பேரறிவாளனை கடந்த மே மாதம் 18ம் தேதி உச்ச நீதிமன்றம் தன்னுடைய தனிப்பட்ட சட்டப்பிரிவு 142 அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்தது. இந்நிலையில், நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘சிறையில் நளினி நன்னடத்தையுடன் இருக்கிறார். சிறையில் இருந்து வெளியே வந்தாலும் அவரால் எந்தவித தீங்கும் ஏற்படாது. சமுதாயத்திற்கு எதிர்மறையாகவும் செயல்பட மாட்டார். அதனால், இவற்றை கருத்தில் கொண்டு பேரறிவாளனை விடுதலை செய்தது போன்று, இவ்வழக்கில் இருந்து நளினியையும் விடுதலை செய்ய வேண்டும். அதற்கு முன்பாக, அவருக்கு இடைக்கால ஜாமீனும் வழங்க வேண்டும்,’ என தெரிவித்துள்ளார்.