சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்கா விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
பதிவு செய்யப்பட்ட சகல வாகனங்களுக்கும் போதியளவிலான எரிபொருள் வழங்கப்படும் என்று தெரிவித்த பணிப்பாளர் நாயகம் அதிகாரசபையின் உத்தியோகபூர்வ இணைதளத்தில் இது தொடர்பான பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்றும் கூறினார்.