சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் ஜெய்ராம் தாக்கூர் தலைமையில் பாஜ ஆட்சி நடந்து வருகிறது. இவருடைய அரசுக்கு எதிராக காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். இது குறித்து அவையில் நேற்று காரசார விவாதம் நடந்தது. சட்டம் ஒழுங்கு பிரச்னை, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சியினர் பேசினர். எதிர்க்கட்சியினரின் இந்த குற்றச்சாட்டுகளை ஆளும் கட்சியினர் மறுத்தனர். விவாதத்துக்கு முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் பதிலளித்து கொண்டிருக்கும் போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்கள் வெளியேறிய நிலையில், தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இது. தோல்வியடைந்தது.