நீங்கள் வருமான வரி செலுத்துபவரா? அக்டோபர் 1 முதல் இந்த பென்ஷன் திட்டம் உங்களுக்கு கிடையாது!

மத்திய அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்களில் ஒன்றான அடல் பென்சன் யோஜனா என்ற திட்டத்தில் ஏராளமானோர் பயன் பெற்று வரும் நிலையில் மத்திய நிதி அமைச்சகம் தற்போது திடீரென புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.

இதன்படி வருமான வரி செலுத்துவோர் அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்த திட்டத்தில் சேருவதற்கு அனுமதி கிடையாது என அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு வருமான வரி செலுத்துபவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது என்பதும் இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டு கொண்டு வருகின்றனர்.

அடல் பென்சன் யோஜனா

கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு அடல் பென்சன் யோஜனா என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் செலுத்தினால் 60 வயதிற்கு பின்னர் ஓய்வூதியமாக ரூ.1000 முதல் 5000 வரை கிடைக்கும் என்பதும் ஓய்வு காலத்தில் இந்த பணம் அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பயன்பாடாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வருமான வரி செலுத்துவோர்

வருமான வரி செலுத்துவோர்

2015ஆம் ஆண்டு முதல் 7 ஆண்டுகளாக இந்த திட்டம் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது மத்திய அரசு திடீரென இந்தத் திட்டத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் வருமான வரி செலுத்துவோர் யாரும் அடல் பென்சன் திட்டத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் சேருவதற்கு அனுமதி இல்லை என அறிவித்துள்ளது.

தடை இல்லை
 

தடை இல்லை

ஆனால் அதேநேரத்தில் இந்தத் திட்டத்தில் சேர விரும்புபவர்கள் அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் சேர்ந்து கொள்ளலாம் என்றும், அதற்கு எந்தவித தடையும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே உறுப்பினர்களாக இருப்பவர்கள் வருமான வரி செலுத்துபவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று அறிவித்துள்ளது.

அக்டோபர் 1

அக்டோபர் 1

அக்டோபர் 1ஆம் தேதிக்கு பின்னர் இந்த திட்டத்தில் சேர்பவர்கள் வருமான வரி செலுத்துபவரா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் வருமான வரி செலுத்துபவராக இருந்தால் அவரது பணம் திருப்பித் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சலகம் அல்லது வங்கி

அஞ்சலகம் அல்லது வங்கி

18 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைவரும் இந்த அடல் பென்ஷன் திட்டத்தில் சேரலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அஞ்சலகம் அல்லது வங்கி ஆகியவற்றின் மூலம் இந்த திட்டத்தில் அதற்குரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சேரலாம்.

4.01 கோடி உறுப்பினர்கள்

4.01 கோடி உறுப்பினர்கள்

அடல் பென்ஷன் திட்டத்தில் 2022ஆம் ஆண்டு மார்ச் வரை 4.01 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர் என்பதும் குறிப்பாக கடந்த நிதி ஆண்டில் மட்டும் சுமார் 99 லட்சம் பேர் இந்த திட்டத்தில் சேர்ந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மனைவிக்கு ஓய்வூதியம்

மனைவிக்கு ஓய்வூதியம்

இந்த திட்டத்தில் சேர்ந்து இருப்பவர்கள் மரணம் அடைந்தால் அவர்களது ஓய்வூதியம் அவரது மனைவிக்கு அவர் இறக்கும் வரை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Income-tax payers will not be eligible to join Atal Pension Yojana from October 1!

Income-tax payers will not be eligible to join Atal Pension Yojana from October 1 | நீங்கள் வருமான வரி செலுத்துபவரா? அக்டோபர் 1 முதல் உங்களுக்கு இந்த வசதி கிடையாது!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.