பி.ரஹ்மான் – கோவை மாவட்டம்
Coimbatore Tamil News: கோவை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்தர் புகைப்பட கலைஞராக உள்ளார். இயற்கை சார்ந்த புகைப்படங்களில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் 75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் கண்களில் தேசிய கொடியின் வடிவம் ஒளிப்படமாக தெரிவது போன்று தனது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.
கணினியில் தேசியக் கொடியின் வடிவத்தை வைத்த அவர் அதன் எதிரே மற்றொருவரை அமர வைத்து தேசிய கொடியின் வடிவம் அவர் கண்ணில் படும்படி வைத்து அதை சுமார் அரை மணி நேரம் முயற்சியில் தனது செல்போனில் புகைப்படமாகவும் வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
தற்போது புகைப்பட கலைஞர் பாலச்சந்தரின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அதற்கு பொதுமக்கள் வாழ்த்து மழை பொழிந்து பாராட்டி வருகின்றனர்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil