கடந்த 10 நாட்களில் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் மூலம் 1 கோடிக்கும் அதிகமான தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
இந்திய சுதந்திர தினத்தின் 75வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு வீட்டிலும் ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை தேசியக் கொடியை ஏற்ற பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளாா். அதன் அடிப்படையில், நாடு முழுதும் 20 கோடி வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி பறக்கவிடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதைத் தொடா்ந்து, தபால் நிலையங்கள் மூலம் பொதுமக்களுக்கு தேசியக் கொடி விற்பனை செய்வது முதன்முறையாக நிகழாண்டு தொடங்கப்பட்டுள்ளது. ஒரு தேசியக் கொடி 25 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தனிநபா்கள் மட்டுமின்றி, பொதுநல அமைப்புகள், கட்சியினா், பள்ளி, கல்லூரிகள் சாா்பில் தேசியக் கொடிகளை ஆா்வமுடன் வாங்கிச் செல்கின்றனா்.
இதனிடையே கடந்த 10 நாட்களில் மட்டும் இந்தியத் தபால் துறை மூலம் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் மூலம் 1 கோடிக்கும் அதிகமான தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக தகவல் தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தபால் துறை அதன் 1.5 லட்சம் அலுவலகங்கள் மூலம் ஒவ்வொரு குடிமகனிடம் தேசியக் கொடிகளைக் கொண்டு சேர்கிறது. 10 நாட்களுக்குள் ஆன்லைன் மற்றும் தபால் நிலையங்கள் மூலம் இந்தியத் தபால் துறை 1 கோடிக்கும் அதிகமான தேசிய விற்பனையைச் செய்துள்ளது.
ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்பவர்களுக்கு நாடு முழுவதும் இலவசமாகத் தேசியக் கொடிகளை டெலிவரி செய்கிறோம். ஆன்லைன் மூலம் இதுவரை 1.75 லட்சம் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. நாடு முழுவதும் இருக்கும் பொதுமக்களுக்குத் தேசியக் கொடிகளைக் கொண்டு செல்வதே எங்கள் இலக்கு. இதற்கு எங்கள் 4.2 லட்சம் தபால் ஊழியர்கள் கைக்கொர்த்தனர். மூவர்ணக் கொடியுடன் செல்பி எடுத்து என்ற www.harghartiranga.com இணையதளத்திலும் பதிவிடலாம்” என்று அதில் கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிக்க: ‘நடிகர் முனாவரை தாக்குவோம்; அரங்கிற்கு தீ வைப்போம்’ – பாஜக எம்எல்ஏ பகிரங்க மிரட்டல்
.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM