தொங்கவிட்ட நிதீஷ் குமார்; தூக்கம் தொலைத்த பாஜக!

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதாவின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனாலும் நிதீஷ்குமார், பாஜக இடையே கருத்து ஒற்றுமை இல்லாததால், இரு தரப்பினரும் மோதல் போக்கை கடைபிடித்து வந்தனர்.

இந்நிலையில் பாஜவுடன் கூட்டணியை முறிப்பதாக நிதீஷ் குமார் திடீரென அறிவித்தார். அப்போது அதிருப்தி எம்எல்ஏக்களை உருவாக்கி ஐக்கிய ஜனதா தளத்தை உடைக்கும் முயற்சியில் பாஜக இறங்கியது தான் உறவை முறிப்பதற்கான காரணம் என நிதீஷ் குமார் அறிவித்தது இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் அடுத்த சில மணி நேரங்களில் பாஜகவின் பரம எதிரி என்று பார்க்கப்படுகிற ஆர்ஜேடி கட்சியுடன், நிதீஷ் குமார் கூட்டணி அமைத்தார்.

இதன் தொடர்ச்சியாக, நிதிஷ் குமார் மீண்டும் முதலமைச்சர் ஆனதோடு, தேஜஸ்வி யாதவ்வுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்து, பா.ஜ.கவுக்கு மரண பங்கத்தை ஏற்படுத்தினார்.

முதல்வர் ஸ்டாலின் டென்ஷன்; திருமாவளவனுக்கு நெருக்கடி!

ஆண்டுக்கணக்கில் நட்பு பாராட்டிய தன்னிடமே வேலை காட்ட துணிந்த பாஜகவுக்கு தக்க பாடத்தை நிதீஷ் குமார் புகட்டி உள்ள நிலையில், அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன? என்கிற எதிர்பார்ப்பு அரசியலில் எழுந்துள்ளது.

இந்த நிலையில், சூட்டோடு சூடாக 2014ம் ஆண்டு வென்றவர்கள் வருகிற 2024 தேர்தலில் வெற்றி பெறுவார்களா? என, சவால் விடும் வகையில் நிதீஷ் குமார் கேட்டு இருப்பது பாஜகவின் தூக்கத்தையே கலைத்து இருக்கிறது.

அதே சமயம் தனக்கு பிரதமர் வேட்பாளராக களம் இறங்கும் எண்ணமில்லை என்று, நிதீஷ் குமார் தெள்ளத்தெளிவாக கூறி இருந்தாலும், மத்தியில் இருக்கும் பாஜக ஆட்சியை அப்புறப்படுத்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என கூறி இருக்கிறார்.

ரஜினிக்கு பாஜக போட்ட உத்தரவு; பம்பரமாய் சுழல அதிரடி ஏற்பாடு!

மேலும் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயை தவறாக பயன்படுத்தினால் பொதுமக்கள் பதிலடி தருவார்கள் என பாஜகவை எச்சரிக்கும் விதமாக நிதீஷ்குமார் கூறி இருப்பதை பாஜக மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவித்து வருகிறது.

இதனால் வரும் நாட்களில் பீகார் அரசியலில் பரபரப்பான காட்சிகள் அரங்கேறலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கொழுந்துவிட்டு எரிகிறது பீகார் அரசியல் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.