அதானி குழுமம் 4 மில்லியன் டன் திறன் கொண்ட அலுமினியம் சுத்திகரிப்பு ஆலை மற்றும் 30 மில்லியன் டன் திறன் கொண்ட இரும்பு தாது ஆலைகளை அமைக்க ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவின் பாக்சைட் மற்றும் இரும்பு தாது இருப்புகளில் பாதிக்கும் மேல் ஒடிசாவிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒடிசாவில் அமைக்கப்படவுள்ள இந்த அலுமினியம் சுத்திகரிப்பு ஆலை பாக்சைட் இருப்புகள் அல்லது செயல்பாட்டு சுரங்களுக்கு அருகில் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிகின்றது.
உச்சத்தில் இருந்து பாதாளம் சென்ற 4 பங்குகள்… உங்களிடம் இருக்கா?
மூன்று ஆலைகள்
இது ஸ்மெல்டர் தர அலுமினியத்தினை உற்பத்தி செய்யும் என கூறப்படுகிறது. அதானியின் இந்த முடிவால் இந்தியாவினை அதிக இறக்குமதி செய்வதில் இருந்து குறைத்து, உள்நாட்டு உற்பத்தியினை மேம்படுத்த உதவும்.
கியோஞ்சர் மாவட்டத்தில் உள்ள தியோஜரில் இரும்பு தாது உற்பத்தி ஆலையும், பத்ரக் மாவட்டத்தில் உள்ள தம்ராவில் பெல்லேட் ஆலையும் அதானி அமைக்கவுள்ளது.
தொடர்ந்து ஒடிசாவில் முதலீடு
இது குறித்து அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி, ஒடிசா எங்களின் முக்கியான மாநிலங்களில் ஒன்று. நாங்கள் இங்கு தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றோம். ஒடிசா அரசிடம் இருந்து எங்களுக்கு தொடர்ந்து நல்ல ஆதரவு கிடைத்து வருகின்றது. நாங்கள் அதனை பாராட்டுகின்றோம்.
அலுமினியம் உற்பத்தி
உலோகங்கள் முக்கியமான ஒன்றாகும். அதில் நம் நாடு நம்பிக்கையுடன் போதிய இருப்புடன் இருக்க வேண்டும். ஆத்ம நிர்பார் திட்டங்கள் உள்பட பல தொலை நோக்கு பார்வையுள்ள திட்டங்களாக உள்ளன. இது வணிகங்களை மேம்படுத்த உதவும். இங்கு புதுபிக்கதக்க எரிசக்திக்கும் ஏற்ற ஒன்றாகும். ஆக பசுமையான எரிபொருளை பயன்படுததி அலுமினியத்தை தயாரிக்க முடியும் என கூறியுள்ளார்.
வேலை வாய்ப்பு
அதானியின் இந்த அலுமினியம் ஆலை மூலம் 7,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதே இரும்பு தாது ஆலையிலும் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்ததில் இந்த ஆலைகள் மூலம் 9300 பேருக்கு மேலாக பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலோகத் துறை
அதானி நிறுவனம் மின் உற்பத்தி, துறைமுகம், விமான நிறுவனம், ஐடி என பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது காப்பர் அலுமினியம், இரும்பு என அடிப்படை உலோகங்களிலும் களமிறங்கியுள்ளது. இது மேற்கோண்டு அதானி குழுமத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
இறக்குமதி குறையும்
ஏற்கனவே ஆதித்யா பிர்லா, வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த துறையில் வெற்றிகரமாக கோலேச்சி வரும் நிலையில், தற்போது அதானியின் நுழைவு இன்னும் போட்டிகரமாக மாற்றியுள்ளது. எனினும் இந்தியாவினை அதிகளவில் இறக்குமதி செய்வதனை குறைக்கும்.
Adani Group gets approval to invest Rs 57,000 crore in Odisha
Adani Group gets approval to invest Rs 57,000 crore in Odisha/ ரூ.57,000 கோடி முதலீடு செய்யும் அதானி.. எந்த மாநிலத்தில் தெரியுமா?