சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது தாக்குதல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

நியூயார்க்: அமெரிக்காவில் பிரபல சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது மர்ம நபர் தாக்குதல் நடத்திய சம்பவம் நடந்துள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், சல்மான் ருஷ்டி. பிரபலமான எழுத்தாளராகிய, இவர் 1980 களில் எழுதிய,” சாத்தானின் வேதங்கள்’ என்ற நூல், சர்வதேச அளவில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், இஸ்லாமுக்கு எதிரான விஷயங்கள் இடம் பெற்றிருப்பதாக கூறி, அவருக்கு எதிராக, கடும் போராட்டங்கள் நடந்தன.

latest tamil news

பயங்கரவாதிகளின் மிரட்டலால், வெளிநாடுகளில் பதுங்கி வாழும், பிரபல சர்ச்சை ஆங்கில எழுத்தாளர், சல்மான் ருஷ்டி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் , நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்ற வந்திருந்தார். அப்போது மேடையில் நின்றிருந்த சல்மான் ருஷ்டியை நோக்கி வந்த மர்மநபர் திடீரென தாக்கியதில் சல்மான் ருஷ்டி நிலைதடுமாறி கீழே விழுந்தார். தாக்கிய நபரை அங்கிருந்த பாதுகாவலர்கள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் ஹெலிகாப்டர் மூலம் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். தாக்கிய நபர் குறித்தும் விசாரணை நடக்கிறது..


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.