உத்திர பிரதேசத்தினை சேர்ந்த முதியவர் ஒருவர் கொடுக்க வேண்டிய நிலுவை 20 ரூபாய்க்காக, 22 வருடங்கள் ரயில்வேயுடன் போராடி வெற்றி பெற்றுள்ளார்.
20 ரூபாய்க்காக 22 வருட போராட்டமா? என்ற கேள்வி எழலாம். ஆனால் இது உண்மைதான்.
உத்திர பிரதேச மாநிலம் மதுராவை சேர்ந்தவர் துங்கநாத் சதுர்வேதி. இவர் கடந்த 1999ம் ஆண்டில் மதுரா ரயில் நிலையத்திற்கு டிக்கெட் வாங்க சென்றுள்ளார்.
ஏர் இந்தியா எடுத்த முடிவால் பயணிகள் மகிழ்ச்சி… சென்னை பயணிகளுக்கு பலன் தருமா?
சில்லறை கொடுக்கவில்லை
அங்கு 70 ரூபாய் டிக்கெட் வாங்க 100 ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் இவருக்கு 90 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு வெறும் 10 ரூபாயினை மீதம் கொடுத்துள்ளனர். அதிகமாக வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்க முடியாது என்றும் கூறிவிட்டனராம். இது தொடர்பாக பல்வேறு தரப்பினருடமும் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். ஆனால் எதுவும் வேலைக்காகவில்லை.
வழக்கு தள்ளுபடி
இதன் பின்னர் சதுர்வேரி நுகர்வோர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் ரயில்வே கிளார்க், மதுரா ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்டோர் குற்றவாளிகளாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து 22 வருடங்களாக விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கினை தள்ளுபடி செய்ய ரயில்வே தரப்பில் கூறபப்ட்டது.
சட்ட போராட்டம்
இதுபோன்ற மனுக்களை சிறப்பு தீர்ப்பாயத்தில் தான் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறியது. ஆனால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தீர்ப்பை மேள்கோள் காட்டி சதுர்வேதி விசாரிக்க செய்தார். இதற்கிடையில் 20 ரூபாய் சில்லறைக்காக 22 வருடம் நடத்திய இந்த சட்ட போரட்டத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
வட்டியுடன் பணம் செலுத்தணும்
சதுர்வேதியின் 20 ரூபாயினை 12% வட்டியுடன் செலுத்த வேண்டும் என்றும், 30 நாட்களுக்குள் அந்த தொகையை திரும்ப செலுத்த வேண்டும் என்றும், அவ்வாறு செலுத்தாவிடில் 15% ஆக வட்டி செலுத்த வேண்டும் என்றும் தீர்பளித்துள்ளது. மேலும் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 15,000 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.
பணத்துக்காக போராட்டம் இல்லை
இது குறித்து சதுர்வேதி நான் 20 ரூபாய் பணத்துகாக போராடவில்லை. பொதுமக்களின் நலனுக்காகத் தான் போராடினேன். நீதிக்காக ப்ராடினேன். இது ஊழலுக்கு எதிரான ஒரு போராட்டம். நான் ஒரு வழக்கறிஞராக இருப்பதால், ஒரு வழக்கறிஞராக பணம் செலுத்தவோ அல்லது நீதி மன்றத்திற்குச் செல்வதற்கான செலவை நான் ஏற்கனவோ வேண்டியதில்லை. இது விலை உயர்ந்ததாக இருக்கலாம் என கூறியுள்ளார்.
120 முறை ஆஜர்
இரு நீண்டகால போராட்டம். சாட்சிகள் இருந்தும் 120 முறை ஆஜராக வேண்டிய நிலை ஏற்பட்டது. பலரும் இந்த வழக்கை தொடருவது வீண் என பலமுறை கேட்டுக் கொண்டனர். ஆனால் நான் மனம் தளரவில்லை. இது பலருக்கும் உத்வேகமாய் அமையும் என சதுர்வேதி நம்புவதாக தெரிவித்துள்ளார்.
Chadurvedi, who has been fighting for justice for 22 years for the balance of Rs.20
Chadurvedi, who has been fighting for justice for 22 years for the balance of Rs.20/ரூ.20 பாக்கி.. 22 வருட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.. எப்படி தெரியுமா?