முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு வருவதற்கு, அவரது அடிப்படை உரிமையை உறுதிப்படுத்துமாறு கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று (12) மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிவில் மற்றும் சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் என்பவரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் பிரஜையும், முன்னாள் முதற் குடிமகனுமான அவருக்கு இலங்கையில் சுதந்திரமாக வசிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஓஷல ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாடு கடத்தப்பட்டாரா கோட்டாபய
கடந்த ஜூலை 18ஆம் திகதி பொலிஸ்மா அதிபரிடம் முன்னாள் ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறினாரா அல்லது சதி காரணமாக நாடு கடத்தப்பட்டாரா எனக் கண்டறியக் கோரி முறைப்பாடு செய்யப்பட்ட போதும் தெளிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டதன் பின்னர் தமது போராட்டத்திலிருந்து விலகியுள்ளதாகவும், இது தொடர்பில் சந்தேகம் நிலவுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர் ஒருவர் பிரதமர் ஆசனத்தில் அமர்ந்தால் அதனை மன மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்: ரமேஷ் பத்திரன |