Salman Rushdie: ‘சல்மானை கத்தியால் குத்திய’…ஹாதி மாடர் குறித்த 5 முக்கிய தகவல்கள்: தீவிரவாத அமைப்புடன் தொடர்பு?

1988ஆம் ஆண்டில் சல்மான் ருஷ்டி (75) வெளியிட்ட தி சாத்தானிக் வெர்சஸ் (The Satanic verses) என்ற புத்தகத்தில், இஸ்லாமிய மதக்கடவுளின் இறைத்தூதர் மற்றும் இஸ்லாமிய மதப்புத்தக்கத்தை விமர்சிக்கும் வகையில் இருப்பதாக கூறி இஸ்லாமிய நாடுகள் அந்த புத்தக்கத்திற்கு தடை விதித்தது. மதச்சார்பற்ற இந்தியாதான் முதல் நாடாக அந்த புத்தகத்தை தடை செய்தது. இப்போதுவரை தடை நீடிக்கிறது.

இந்நிலையில், 1989ஆம் ஆண்டில் சல்மான் ருஷ்டியின் தலைக்கு ஈரான் அதிபர் ருஹொலா கெமியோனி 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்தார். ருஹொலா உயிரிழந்த பிறகு ஈரான் தனது அறிவிப்பில் இருந்து பின்வாங்கியது. இருப்பினும், சல்மான் ருஷ்டியின் உயிருக்கு அச்சுறுத்தல் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது.

இந்நிலையில்தான், நியூயார்க் நகரத்தில் ஆண்டுதோறும், கோடைக் கால சமயத்தில் இலக்கிய நிகழ்வுகள்பங்கேற்று, பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சல்மான் ருஷ்டியை ஹாதி மாடர் என்பவர் சரமாரியாக 15-20 முறை குத்தினார். இதில், சல்மானின் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, பார்வை திறன் பறிபோகும் அபாயம் இருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கொலைவெறி தாக்குதல் நடத்திய ஹாதி மாடர் குறித்து 5 முக்கிய தகவல்களை நியூயார்க் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.

‘மாடர் ஹாதி பயன்படுத்திய சமூக ஊடகங்களை மதிப்பாய்வு செய்ததில் கிடைத்த முதற்கட்ட தகவலில், ஹாதி அவ்வப்போது ஷியா பிரிவு தீவிரவாதம் குறித்த கருத்துகளை பகிர்ந்துள்ளார். மேலும், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர்கள் என்னும் தீவிரவாத அமைப்பு எதற்காக செயல்படுகிறது என்பது குறித்தும் பதிவிட்டுள்ளார். இருப்பினும், அவருக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளதாக என்பதை தற்போது உறுதியாகக் கூற முடியாது.’

‘2020ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்ட இஸ்லாமிய புரட்சிகர காவலர்கள் தீவிரவாத அமைப்பின் கமெண்டர் காசம் சுலேமணியின் புகைப்படங்கள் அவரது செல்போனில் இருக்கிறது.’

‘சல்மான் ருஷ்டியை மாடர் கண்மூடித்தனமாகக் கத்தியால் தாக்கியபோது, அருகில் இருந்த ஹென்ட்ரி ரீஸுக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.’

‘மாடர் உடன் அவரது கூட்டாளிகள் யாரும் வரவில்லை. தனி நபராகத்தான் வந்திருக்கிறார். கத்திக்குத்து நடைபெற்ற அரங்கில் சில எலக்ட்ரானிக் கருவிகள் கிடைத்துள்ளன.’‘மாடர் நியூ ஜெர்சியை சேர்ந்தவர். அவர் உண்மையில் அந்த ஊரைச் சேர்ந்தவர்தானா என்பது குறித்தும், அவர் இதற்குமுன் செய்த குற்றங்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக’ நியூயார்க் காவல்துறை தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.