எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார்… ட்விட்டரில் டுவிஸ்ட் வைத்த ஓலா சி.இ.ஓ பவேஷ் அகர்வால்!

இந்திய வாகன சந்தையில் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி அதிகமாகி வருகிறது என்பதும் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடும் அதிகமாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் எலக்ட்ரிக் வாகன சந்தையில் ஏற்கனவே ஓலா நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது என்பதும் இந்த ஸ்கூட்டர் களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஓலா நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரை வரும் சுதந்திர தினத்தில் அறிமுகப்படுத்த இருப்பதாக ஒரு ட்வீட்டை பதிவு செய்து டுவிஸ்ட் வைத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உரிமை கோரப்படாமல் இருக்கும் ரூ.40,000 கோடி… சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு!

எலக்ட்ரிக் வாகனங்கள்

எலக்ட்ரிக் வாகனங்கள்

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். பெருகிவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றனர் என்பதும் ஒரு சில அசம்பாவிதங்கள் எலக்ட்ரிக் வாகனங்களால் ஏற்பட்ட போதிலும் எலக்ட்ரிக் வாகனங்கள் மீது உள்ள ஆர்வம் இன்னும் மக்களுக்கு குறைவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஓலா ஸ்கூட்டர்

ஓலா ஸ்கூட்டர்

இந்தியாவில் ஓலா நிறுவனம், டாடா மோட்டார்ஸ் உள்பட ஒருசில நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஓலா நிறுவனம் ஏற்கனவே இந்திய வாகன சந்தையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

பவேஷ் அகர்வால்
 

பவேஷ் அகர்வால்

இந்த நிலையில் ஓலா நிறுவனத்தின் சிஇஓ பவேஷ் அகர்வால் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி 2 மணிக்கு சந்திப்போம் என கூறி ஓலா எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் குறித்த ஒரு அனிமேஷன் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து வரும் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரை ஓலா நிறுவனம் அறிமுகம் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஓலா எலக்ட்ரிக் கார்

ஓலா எலக்ட்ரிக் கார்

ஏற்கனவே எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் முன்னணியில் இருக்கும் ஓலா நிறுவனம் மின்சார காரையும் அறிமுகப்படுத்தினால் வாகன சந்தையில் ஒரு முக்கிய இடத்தில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ்

ஏற்கனவே இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் டாடா மோட்டார்ஸ் மற்றும் எம்ஜி ஆகியவை தங்களின் பிரபலமான மாடல்களின் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. மேலும், ஹூண்டாய், கியா மோட்டார்ஸ் மற்றும் வால்வோ ஆகியவையும் இந்தியாவிற்கு எலக்ட்ரிக் வாகனங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளன.

ஓலா எலக்ட்ரிக் பேட்டரி

ஓலா எலக்ட்ரிக் பேட்டரி

மேலும் எலக்ட்ரிக் பேட்டரி தொழில்நுட்பத்திற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் 500 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்வதாக சமீபத்தில் அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Is Ola Planning to Launch Electric Car On Independence Day? CEO Bhavish Aggarwal twist tweet

Is Ola Planning to Launch Electric Car On Independence Day? CEO Bhavish Aggarwal twist tweet | எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார்… ட்விட்டரில் டுவிஸ்ட் வைத்த ஓலா நிறுவனர்!

Story first published: Saturday, August 13, 2022, 14:32 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.