இட்லி சாப்பிடும்போது ஆன்-லைன் வர்த்தக ஆலோசகர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
புதுச்சேரி காந்தி நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஞானசேகரன், 52. ஆன்-லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்பவர்களுக்கு ஆலோசனை வழங்கும் தொழில் செய்து வந்தார். நேற்றுமுன்தினம் காலை 9:30 மணியளவில், ஞானசேகரன் தனது வீட்டில் இட்லி சாப்பிட்டு கொண்டு இருந்தார். அப்போது, திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அவரை ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.ஞானசேகரன் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். அவர் மாரடைப்பினால் உயிரிழந்தாரா அல்லது இட்லி சாப்பிடும்போது மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தாரா என டி.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இட்லி சாப்பிடும்போது ஆன்-லைன் வர்த்தக ஆலோசகர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.புதுச்சேரி காந்தி நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஞானசேகரன், 52. ஆன்-லைன் வர்த்தகத்தில் முதலீடு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்