சென்னை: தம்பி ராமையா தனது முடிவை மாற்றிக்கொள்ளாவிட்டால் அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என தம்பி ராமைய்யாவை மேடையில் வைத்துக்கொண்டே சீமான் எச்சரித்தார்.
நடிகர் தம்பி ராமய்யா உதவி இயக்குநர், நகைச்சுவை, குணசித்திர நடிகர் என பல பரிமாணங்களை கொண்டவர். ஆழமான நடிப்புக்கு சொந்தக்காரர்.
ஜிவி.2 விழா மேடையில் அவர் பேசிய பேச்சுக்கு அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என சீமான் எச்சரிக்கை விடுத்தார் என்ன அதன் விஷயம் பார்ப்போம்.
ஜிவி -2 படவிழா
நடிகர் தம்பி ராமய்யா நேற்று ஜிவி-2 பட விழாவில் கலந்துக்கொண்டார். இந்த விழாவில் இயக்குநர் பாக்கியராஜ், சீமான், சுரேஷ் காமாட்சி உள்ளைட்ட பலர் கலந்துக்கொண்டனர். விழாவில் பேசிய தம்பிராமய்யா ஜிவி-2 படம் உயரத்தை தொடுமா என சொல்ல முடியாவிட்டாலும் நிச்சயம் தயாரிப்பாளருக்கு துயரத்தை தராது என்று தாராளமாக சொல்லலாம். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் ராஜா கிளி மூலம் மீண்டும் இயக்குநராக மாறியுள்ளேன்.. அதனால் இனி நிறைய படங்களில் நடிப்பதில்லை என முடிவெடுத்துள்ளேன்” என்று கூறினார்.
சீமான் வேண்டுகோள்
அதன்பின்னர் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது, “ஆஹா ஓடிடி தளத்தை தமிழிலும் கொண்டுவர வேண்டுமென அவர்கள் நினைத்ததற்காகவே அவர்களை பாராட்டலாம். எல்லோருக்கும் பிரியாணி சாப்பிடத்தான் ஆசை. ஆனால் கூழ் தானே கிடைக்கிறது. தம்பி சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகாவிட்டாலும் கூட ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
விருது வாங்கியவர்களை கண்டுக்கொள்ளாத அரசு- சீமான்
விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு கூட 10 கோடி, 20 கோடி என அரசுகள் போட்டி போட்டு பரிசு வழங்குகின்றனர். ஆனால் விருது வென்று வரும் படைப்பாளிகளுக்கு பாராமுகம் காட்டுகின்றன. சாராயக் கடைகளை அரசாங்கம் நடத்தும்போது ஏன் திரைப்படத்தையும் தயாரிக்கக் கூடாது.. நிச்சயமாக ஒருநாள் திரையுலகில் மறுமலர்ச்சி ஏற்படும்.. அந்த நாளும் வரத்தான் போகிறது” என்று கூறினார்.
ஓ இதற்குத்தான் சீமான் எச்சரித்தாரா?- நிம்மதி பெருமூச்சு விட்ட விழா குழுவினர்
பின்னர் பேசிய சீமான், ‘தம்பி ராமையா இங்கு பேசியது போல அவர் படங்களில் நடிப்பதை குறைக்கக் கூடாது. அப்படி செய்தால் அவர் வீட்டு வாசலில் முற்றுகையிடுவோம்” என்று அன்புடன் எச்சரிக்கை விடுத்தார். சீமான் தம்பி ராமைய்யா வீட்டை முற்றுகையிடுவோம் என்றவுடன் ஏதோ தவறாக சொல்லிவிட்டாரா தம்பி ராமய்யா, விழா மேடை பிரச்சினைக்குரிய மேடையாகிவிட்டதா? என ஒரு சில நொடிகள் அதிர்ச்சியான மேடையில் இருந்த தம்பி ராமய்யா உள்ளிட்டோர் அவர் கோரிக்கையை கேட்டு சிரித்தனர்.