பயங்கரவாதிக்கு ஆதரவு: சீனாவுக்கு கண்டனம்| Dinamalar

புதுடில்லி: பாகிஸ்தானை சேர்ந்த ‘ஜெய்ஷ் – இ – முகமது’ பயங்கரவாத இயக்கத்தின் துணைத் தலைவர் அப்துல் ரப் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் சீனா தடை விதித்ததை இந்தியா கண்டித்துள்ளது.

இதுகுறித்து, நம் நாட்டின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது: பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத இயக்கத்தின் துணைத் தலைவரான அப்துல் ரப் அசாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவும், அமெரிக்காவும் பரிந்துரை செய்தன.ஆனால், நம் அண்டை நாடான சீனா இந்த பரிந்துரைக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது. இது வன்மையான கண்டிக்கத்தக்கது.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.