சந்துவெளி மாரியம்மன் கோவிலில் 82வது ஆண்டு செடல் திருவிழா| Dinamalar

புதுச்சேரி: சந்துவெளி மாரியம்மன் கோவில் செடல் திருவிழா விமர்சையாக நடந்தது.முருங்கப்பாக்கம் சந்துவெளி மாரியம்மன் கோவிலில் 82வது ஆண்டு செடல் திருவிழா, கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

தினமும் அம்மனுக்கு அபிேஷகம் ஆராதனைகள் நடந்து வருகிறது. முக்கிய உற்சவமான செடல் திருவிழா நேற்று காலை, கரகம் அலங்கரித்தலுடன் துவங்கியது. மதியம் 12 மணிக்கு, கூழ் வார்த்தலும், மாலை 6.30 மணிக்கு பூங்கரகம் எடுத்தல் நிகழ்ச்சியும் தொடர்ந்து செடல் விழாவும் நடந்தது.பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இரவு 7 மணிக்கு, அம்மன் இந்திர விமானத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ஆனந்து, திரவுபதியம்மன் தேவஸ்தான அறங்காவலர் குழுவினர், விழா குழுவினர், ஊர் மக்கள் செய்திருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.