பாலைவனம் என்றாலே நம் மனதுக்கு தோன்றுவது மணல் குவியலும் வீசும் அனல் காற்றும் தான். மழையை எப்போதாவது அரிதாக காணும் பாலைவன மக்கள் தங்கள் பிரதேசத்தில் வெள்ளத்தை பார்க்கும்போது அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நினைத்து பார்க்கவே வியப்பாக இருக்கிறது .
வளைகுடா நாடுகளில்
மழை
பெய்வது என்பதே அரிதான ஒன்று. பெரும்பாலும் பாலைவன பிரதேசமான அரபு அமீரகம் உள்ளிட்ட பாலைவன நாடுகளில் அபூர்வமாக எப்போதாவது சிறிய அளவில் மழை பொழிவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு எதிர்பார்ப்பிற்கு மேலாக நல்ல மழை பெய்து வருகிறது.
கடந்த சில நாட்களாகவே அமீரகத்தில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் பல ஆண்டுகளுக்கு பிறகு முழுவதுமாக நிரம்பியுள்ள நிலை உருவாகியுள்ளது. மேலும் சில நாட்களுக்கு கனமழை பெய்ய உள்ளதால் அணைகளில் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நீண்ட காலம் கழித்து அமீரகத்தில் நல்ல மழை பெய்துள்ளது மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாலைவன பிரதேசத்தில் வாழும் மக்கள் திடீரென்று வெள்ளத்தை பார்க்கும்போது அவர்கள் மனதில் ஏற்ப்படும் மகிழ்ச்சி என்பது அலாதியானதாக தானே இருக்கும்!