ரஜினிகாந்த் ஆளுநர் சந்திப்பு தேநீர் விருந்தாகத்தான் இருக்கும் – கார்த்தி சிதம்பரம்

நடிகர் ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்த நிகழ்வு தேநீர் விருந்தாகத்தான் இருக்கலாம் என சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கடியாபட்டியில் இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாதயாத்திரை நடைபெற்றது. பாதயாத்திரையை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி.கார்த்தி சிதம்பரம், 
தேசியக் கொடியை விற்பனை செய்கிறார்கள். அந்த விளம்பரங்களில் ஜான்சிராணி, சுபாஷ்சந்திர போஸ், திலக் உள்ளிட்ட வடநாட்டு சுதந்திர போராட்ட வீரர்களை நினைவுகூறுகிறார்கள். தென்னாட்டு சுதந்திர வீரர்களான வேலுநாச்சியாரையோ கொடிகாத்த குமரனையோ பாரதியாரையோ நினைவுகூரவில்லை. தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
image
வீட்டிற்கு வீடு தேசியக்கொடி ஏற்றுவது நல்ல விஷயம்தான். 99 சதவீத வடநாட்டு மாநிலத்தவருக்கு தென் மாநில சுதந்திரப் போராட்ட வரலாறு தெரியாது. தொடர்ந்து தென்னாட்டு சுதந்திரப் போராட்ட வீரர்கள் வரலாறு இருட்டடிப்பு செய்யப்படுகிறது
நடிகர் ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்த நிகழ்வு தேநீர் விருந்தாகத்தான் இருக்கலாம். நான் புகைப்படத்தில் தேநீரை மட்டும்தான் பார்த்தேன் என்றவரிடம் ப.சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆவாரா என்ற கேள்விக்கு, சோனியா காந்தி உள்ளவரை காங்கிரஸ் கட்சியின் தலைவர் அவர் தான் என்றார்.
image
“ பீகாரில் அவர்களுக்குள்ளாகவே ஏற்பட்ட பூசல் இதுவே. இந்தியா முழுவதும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்று சொல்ல முடியாது. நிதீஷ்குமார் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இதுபோல் மாறிக் கொள்வார். தமிழக நிதியமைச்சர் கார் மீது காலணி வீசிய சம்பவம் பற்றி கேள்விப்பட்டேன். அதுபோல கலாசாரம் தமிழ்நாட்டில் கூடாது. இத்தகைய அநாகரிகமான செயலை வன்மையாக கண்டிக்கிறேன்” என பேட்டியளித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.