புதுச்சேரி: புதுச்சேரி கோவில்களில் நாளை உஞ்சவ்ருத்தி நாம சங்கீர்த்தனம் நடக்கிறது.
கும்பகோணம் அடுத்த கோவிந்தபுரத்தில் உள்ள பகவந்நாம போதேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 330வது ஆராதனை மகோற்சவம், வரும் செப்டம்பர் 10ம் தேதி முதல் 22ம் தேதிவரை நடைபெற உள்ளது. இந்த உற்சவத்திற்காக கோவிந்தபுர மடத்து பாகவதர்களால் பல்வேறு பகுதிகளில் உஞ்சவ்ருத்தி நாம சங்கீர்த்தனம் நடைபெற்று வருகிறது.
அதன்படி, நாளை 14ம் தேதி காலை 7:30 மணி முத்ல 8:15 மணிவரையில் முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் உஞ்சவ்ருத்தி நாம சங்கீர்த்தனை நடக்கிறது. அதனைத் தொடர்ந்து காலை 8:30 மணி முதல் 9:15 மணிவரை பிருந்தாவனம் சதானந்த விநாயகர் கோவிலிலும், காலை 9:30 மணி முதல் 10:30 மணிவரை குறிஞ்சி நகர் வலம்புரி ஞான விநாயகர் கோவிலிலும், காலை 10:40 மணி முதல் பகல் 12:30 மணிவரை எல்லப்பிள்ளைச்சாவடி சிருங்கேரி சாரதாம்பாள் கோவிலிலும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, கிருஷ்ண பிரேமிக பஜனை மண்டலியினர் செய்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement