சாலைப் பாலங்களை முடக்கியது உக்ரைனிய படைகள்: பிரித்தானிய உளவுத் துறை தகவல்!


  • கெர்சன் நகரில் உள்ள இரண்டு சாலைப் பாலங்களும் பயன்பாட்டில் இல்லை பிரித்தானிய உளவுத் துறை அறிக்கை
  • அண்டோனிவ்ஸ்கி சாலைப் பாலத்தை மேலோட்டமான பழுதுபார்ப்பதில் மட்டுமே ரஷ்ய படைகள் முன்னேற்றம்

உக்ரைனின் கெர்சன் நகரில் உள்ள இரண்டு சாலைப் பாலங்களும் பயன்பாட்டில் இல்லை என பிரித்தானிய உளவுத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் தொடங்கியதில் இருந்தே பிரித்தானியாவின் உளவுத் துறை உக்ரைனுக்கு தேவையான உளவுத் தகவல்களை தினசரி வழங்கி வருகிறது.

அந்த வகையில் இன்று காலை பிரித்தானிய உளவுத் துறை அளித்துள்ள தகவலில், ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் கெர்சன் நகரின் இரண்டு தரைப்பாலங்களும் தற்போது பயன்பாட்டில் இல்லை என தெரிவித்துள்ளது.

இதுத் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட கெர்சன் பிராந்தியத்தின் டினிப்ரோவின் மேற்குக் கரையில் உள்ள இரண்டு முதன்மை சாலைப் பாலங்களும் இப்போது கணிசமான இராணுவ மறுசீரமைப்பு நோக்கங்களுக்காக பயனபடுத்தப்படாமல் இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

மேலும் ஆகஸ்ட் 10ம் திகதி அன்று உக்ரைனிய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதலுக்கு பிறகு நோவா ககோவ்காவில் உள்ள டினிப்ரோ ஆற்றுப் பாலம் கனரக வாகனங்கள் பயன்படுத்த முடியாததாக மாற்றியிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

சாலைப் பாலங்களை முடக்கியது உக்ரைனிய படைகள்: பிரித்தானிய உளவுத் துறை தகவல்! | Two Road Bridges To Kherson Out Of Use Uk ModSKY NEWS

கூடுதல் செய்திகளுக்கு: வெறும் 24 மணி நேரத்தில்…கனடா இளைஞர் செய்த மிகப்பெரிய சாதனை

அத்துடன் சமீப நாட்களில் சேதமடைந்த அண்டோனிவ்ஸ்கி சாலைப் பாலத்தை மேலோட்டமான பழுதுபார்ப்பதில் மட்டுமே ரஷ்ய படைகள் பெற்றுள்ளது எனவும் பிரித்தானிய உளவுத் துறை தெரிவித்துள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.