முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவதற்கான பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் விவகார அரசியல் மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அறிவுறுத்தல்களைப் பெறுவது இது போன்ற ஒரு விஷயத்திற்கு அவசியமில்லை.கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தொடர்பிலேயே
ஆலோசனை பெற வேண்டும். வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காகவே சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடியதாக அமைச்சர் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் மேலும் தனது விளக்கத்தை அளித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு மன்னிப்பு வழங்குவது நியாயமானது எனவும் நீதிமன்றில் பிரமாணப் பத்திரம் சமர்ப்பித்ததன் பின்னர் ஜனாதிபதி அவருக்கு மன்னிப்பு வழங்குவார் என எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.