சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ராமிரெட்டிபட்டி கிராமத்தில் உள்ள மந்தை தோப்பூர் பகுதியில் 50 ஆண்டுக்கு முன்பு மக்களின் குடிநீர் தேவைக்காக அரசு கிணறு அமைத்து கொடுத்திருந்தது. பொது கிணற்றில் இருந்து மக்கள் நீரை இறைத்து பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் கிணற்று நீரை பயன்படுத்தாமல் போனதால், கிணறு பயன்பாடு இன்றி இருந்து வந்தது. அந்த கிணறு தனியாரால் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமிக்கப்பட்டு, மூடி மறைக்கப்பட்டது. இதனை அறிந்த பொதுமக்கள் கிணற்றை மீட்க நீண்ட காலமாக அதிகாரிகளிடம் புகார் மனுக்களை கொடுத்து, காணாமல் போன கிணற்றை மீட்க வேண்டி கோரிக்கை வைத்து வந்தனர்.
பொதுமக்களின் தொடர் நடவடிக்கையால், கிணறு இருந்த இடம் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளரின் பெயரில் இருப்பது தெரியவந்தது. அரசுக்கு சொந்தமான இடம் என்பதால் அந்த இடத்தில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதனை அறிந்த தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கிணற்று பகுதியில் அரசு கட்டுமான பணி மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அறிந்து ஊர் மக்கள் திரண்டு வந்து தாரமங்கலத்தில் இருந்து ஜலகண்டாபுரம் செல்லும் சாலையில், மறியலில் ஈடுபட்டனர்.
Apple Link: https://apple.co/3yEataJ