சென்னை: சுதந்திர தினத்தையொட்டி 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் வழங்கப்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 5 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறந்த பொதுச்சேவைக்கான முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சேவையில் தன்னலம் கருத்தாமல் சிறப்பாக செயல்பட்ட 5 பேருக்கு பொதுசேவைக்காக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.