குடியிருப்பு வளாகத்திற்குள் மூன்றாவது நாளாக வந்து சென்ற சிறுத்தையால் அம்பிகாபுரம் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள அம்பிகாபுரம் பகுதியில் அவ்வப்போது கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் இரவு நேரத்தில் ஊருக்குள் உலா வருவது வழக்கம், இந்நிலையில் இங்குள்ள முருகன் என்பவரின் பங்களா காம்பவுண்ட் சுவரை தாண்டி உள்ளே நுழைந்த சிறுத்தைக்கு அங்கு உணவு எதுவும் கிடைக்காததால் சிறிது நேரம் வீட்டை சுற்றி வந்து பின்னர் மீண்டும் திரும்பிச் சென்றது, இது அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
இதே வீட்டில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சிறுத்தை வந்து சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இதனால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் இப்பகுதியில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் தேயிலை தோட்டங்களில் வேலை செய்பவர்கள், பள்ளி செல்லும் குழந்தைகள், அச்சமடைந்துள்ளனர், எனவே சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM