நான் ஒரு சீனன்.. தீவிரவாதி அல்ல என ஹூவாய் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி Li Xiongwei தெரிவித்துள்ளார்.
ஏன் என்ன காரணம்? எதற்காக இப்படி ஒரு அறிக்கை? அப்படி என்ன தான் பிரச்சனை? வாருங்கள் பார்க்கலாம்.
ஹுவாய் டெலிகம்யூனிகேஷன்ஸ் (இந்தியாவின்) தலைமை செயல் அதிகாரி, தனது ஜாமீன் மனு மீதான வருமான வரித்துறையில் நிலைப்பாட்டிற்கு பதிலளிக்கும் விதமாக, நான் ஒரு சீனன், நான் தீவிரவாதி அல்ல என தெரிவித்துள்ளார்.
சீனா, தைவானில் முதலீடு செய்த இந்திய முதலீட்டாளர்கள் கண்ணீர்.. ஏகப்பட்ட நஷ்டம்..!
நான் ஒரு சீனன், தீவிரவாதி அல்ல
இது ஷாருக்கானின் மை நேம் இன் கான் என்ற வரிகள் போல உள்ளது. மை நேம் இன் கான் என்பதை போல, நான் ஒரு சீனன், தீவிரவாதி அல்ல என்று கூறியுள்ளார்.
லியின் வழக்கறிஞர் இந்த கருத்தினை நீதிமன்றத்தில் கூறியுள்ளதாக தி எக்னாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளார்.
ஐடி துறையின் வாதம்
சீனாவுடன் இந்தியாவுக்கு நாடு கடத்தல் ஒப்பந்தம் இல்லை என்பதால், ஹூவாய் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரியை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவது கடினம் என்று ஐடி துறை நீதிமன்றத்தில் கூறியது. விசாரணை இன்னும் முடிவடையவில்லை என்ற நிலையில், தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் சுற்றறிக்கையை ரத்து செய கோரி லி மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
லுக் அவுட் நோட்டீஸ்
லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டால், அந்த நபர் வெளிநாடு செல்வதை அதன் மூலம் தடுக்க முடியும். இதன் மூலம் குற்றம் செய்தவர்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாது. இதன் மூலம் பலரும் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. லீ க்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட இந்த LOC, அதிகாரத்தினை தவறாக பயன்படுத்துதாக லீயின் வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார். இது தெரிந்த ஒரு குற்றத்திற்காக வழங்கப்படுவது. ஆனால் சிஈஓவின் குற்றம் அறிய முடியாது என்றும் கூறியுள்ளார்.
திரும்ப வருவாரா?
இதற்கிடையில் ஹூவாய் இந்தியா தலைமை செயல் அதிகாரி சீனாவுக்கு செல்ல அனுமதித்தால், அவர் இந்தியா திரும்புவதை உறுதி செய்வதற்காக பாதுகாப்பினை ஆராய வேண்டும் என நீதிமன்றம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. பல தரப்பும் அவர் சீனா சென்ற பின்னர் திரும்ப வரவில்லை என்றால் என்ன செய்வது என்ற கேள்வியினை எழுப்பி வருகின்றனர்.
I am a Chinese, not a terrorist: huawei india CEO tells court
I am a Chinese, not a terrorist: huawei india CEO tells court/நான் ஒரு சீனன்.. தீவிரவாதி அல்ல.. ஹூவாய் இந்தியாவின் CEO ஆவேசம் !