வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 347 போலீசாருக்கு வீர தீர செயலுக்கான பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், மாநிலங்கள் பட்டியலில், அதிகபட்சமாக ஜம்மு காஷ்மீர் 108 போலீசார் பதக்கம் பெற உள்ளனர்.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வீர தீர செயலுக்கான பதக்கங்களில், காஷ்மீரை தொடர்ந்து, மஹாராஷ்டிரா போலீசார் 42 பேரும், சத்தீஷ்கர் போலீசார் 15 பேரும் பெற உள்ளனர்.ஆயுதப்படைகளை பொறுத்த வரையில் 109 சிஆர்பிஎப் வீரர்களும், 19 எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் பதக்கம் பெறுகின்றனர்.
இந்த 347 விருதுகளில், ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் வீரதீர செயலுக்காக 204 பதக்கமும், நக்சல் பாதித்த பகுதிகளை சேர்ந்த படையினரின் வீரதீர செயலுக்காக 80 பதக்கமும், வடகிழக்கு மாநிலங்களில் நடந்த நிகழ்வுக்காக 14 பதக்கமும் வழங்கப்படுகிறது.
சிறந்த பணிக்கான ஜனாதிபதியின் விருது 87 போலீசார் பெறுகின்றனர். அதில், உ.பி.,யில் 6 பேரும். ம.பி.,யில் 4 பேரும், மஹாராஷ்டிரா மற்றும் தமிழகத்தை சேர்ந்த போலீசார் தலா 3 பேரும் பெறுகின்றனர்.
மெச்சத்தக்க பணிக்காக 648 போலீசாருக்கு விருது வழங்கப்படுகிறது. அதில் அதிகபட்சமாக உ.பி.,யை சேர்ந்த 72 பேருக்கும், மஹாராஷ்டிராவை சேர்ந்த 39 பேருக்கும், தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த தலா 24 பேருக்கும் விருது வழங்கப்படுகிறது.சுதந்திர தினத்தில் 1082 போலீசார் விருது பெற உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement