ஆங்கிலேயருக்கு எதிராக படை திரட்டிய சுவாமிகள்| Dinamalar

ஆங்கிலேயர் ஆட்சியில், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண்ணொருவர், மனம் நொந்து தற்கொலை செய்து கொண்டார். இதை கேட்டு கொதித்தெழுந்த சுவாமிகள், ஆங்கிலேயருக்கு பாடம் புகட்ட, ரகசியமாக படை திரட்டினார். அவர் தான் கரிபன்டனாள் மடத்தின் குருகங்காதரேஸ்வர சுவாமிகள்.ஆங்கிலேயர் ஆட்சி நடந்த, 1800 — 1857ன் கால கட்டத்தில், இன்றைய விஜயபுரா மாவட்டத்தின், கரிபன்டனாள் கிராமத்தில் மடம் பிரபலமாக இருந்தது. மடாதிபதி குருகங்காதரேஸ்வர சுவாமிகள், மக்களுக்கு நீதி உபதேசம் செய்வது, மருந்துகள் கொடுத்து உபசரிப்பது என தொண்டு செய்து வந்தார்.கரிபன்டனாள் கிராமத்தின் பக்கத்து கிராமமான ரேபினாளில், கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணொருவரை, ஆங்கிலேய அதிகாரி ஒருவர், பாலியல் பலாத்காரம் செய்தார். அவமானமடைந்த அந்த பெண், தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தி குருகங்காதரேஸ்வர சுவாமிகளுக்கு தெரிந்தது. கொதித்தெழுந்த சுவாமிகள், ஆங்கிலேய அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சபதம் ஏற்றார்.ஆங்கிலேயருக்கு எதிராக போராட்டம் நடத்த, தயாரான சுவாமிகள், வங்காளத்தின் ஆனந்த மடத்துக்கு சென்றார். அங்கு திட்டங்கள் வகுத்து, மீண்டும் கரிபன்டனாள் மடத்துக்கு திரும்பினார். தன் விருப்பத்தை பக்தர்களிடம் தெரிவித்தார். ஏற்கனவே ஆங்கிலேயரின் அடக்கு முறையால், கொதிப்பில் இருந்த பக்தர்கள், குறிப்பாக இளைஞர்கள், கங்காதரேஸ்வர சுவாமிகளுடன் கை கோர்க்க தயாராகினர்.கரிபன்டனாளில், 21 பயிற்சி மையங்கள் அமைத்தார். இதற்காக மடத்தின் அனைத்து சலுகைகளையும் பயன்படுத்தினார். முதலில் இளைஞர்களை உடல், மன ரீதியாக வலுப்படுத்தினார். அதன்பின் ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்துக்கு தயாரானர். கொட்டூர், சுரபுராவின் மக்களிடம் உதவி பெற்று, வாள் வீச்சு, குதிரை சவாரி, வெடி குண்டுகளை பயன்படுத்துவது உட்பட, அனைத்து விதமான பயிற்சிகளையும் ரகசியமாக அளித்தார்.பயிற்சி பெற்று, ஆங்கிலேயரின் திமிரை அடக்க, ஒற்றைக்காலில் நின்ற இளைஞர்கள் கொண்ட படையை உருவாக்கினார். ஆங்கிலேயரை சிம்மசொப்பனமாக வாட்டி வதைத்த, சுரபுரா சமஸ்தானத்துக்கு படையை அனுப்பி வைத்தார்.இதே சந்தர்ப்பத்தில், சுரபுரா சமஸ்தானத்தின் ராஜா வெங்கடப்பா நாயகா, ஹிந்து மன்னர்கள் அனைவரும் சேர்ந்து, ஆங்கிலேயர்களை நம் நாட்டிலிருந்தே விரட்ட முயற்சித்து வந்தார். ஆனால், இந்த சமஸ்தானத்தின், சில சதியாளர்களால் சுரபுரா சமஸ்தானத்துக்குள், ஆங்கிலேயர்களின் பெரிய படை நுழைந்தது. அப்போது கங்காதரேஸ்வரர் அனுப்பிய இளைஞர் படை, உதவிக்கு வந்து ஆங்கிலேய படையை விரட்டியது.ஆங்கிலேய அதிகாரி கேப்டன் நியூபெரி, உதவி அதிகாரி ஸ்டூவர்ட் கொல்லப்பட்டனர். மடாதிபதி உருவாக்கிய படையினர் கை ஓங்கியது.

வேண்டும். இங்கிருந்து 12 கி.மீ., தொலைவில், கரிபன்டனாள் குருகங்காதரேஸ்வரர் சுவாமிகளின் மடம் உள்ளது.

– நமது சிறப்பு நிருபர் –

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.