தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவே ராமேஸ்வரம் வந்தடைந்தார்.
இதனை அடுத்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் பெற்ற பின்னர் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களின் வீட்டிற்கு சென்று உறவினர்களை சந்தித்தார்.
அதனை அடுத்து பாம்பன் மீன்பிடி துறைமுகத்திற்கு சென்று அங்கு நாட்டுப் படகு மீனவர்களை சந்தித்து அங்கிருந்து நாட்டுப் படகு மூலம் கடல் மார்க்கமாக குந்துகாலில் அமைந்துள்ள விவேகானந்தா மணி மண்டபத்திற்கு சென்று அங்கு விடுதலைப் போராட்ட தியாகிகளின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் மாநிலத் தலைவர் செய்தியாளர்களை சந்தித்தபோது,
கட்சியில் பணியாற்றி விட்டு வெளியே சென்றவர் பற்றி எப்போதும் தவறாக பேசியது கிடையாது. எல்லோரும் கட்சிக்காக உழைத்திருக்கிறார்கள். சில காரணங்களால் வெளியே சென்று இருக்கிறார்கள். ஆயிரம் நபர்கள் கட்சிக்கு வந்திருக்கிறார்கள். நூற்றுக்கணக்கானோர் வெவ்வேறு காரணத்திற்காக வெளியே சென்றுள்ளனர். நீண்ட நெடிய பயணத்தில் ஒரு கட்சிக்கு ஒரு நபர் வருவதும் போவதும் கட்சிக்கு இயல்புதான்.
கட்சியில் இணைவதும் வேறு கட்சிக்கு செல்வதும் அவரவர்கள் உரிமை, மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் திமுகவிற்கு சென்றது அவரது உரிமை. அதற்காக அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம். சிறுபான்மை பிரிவினருக்கு எதிரான கட்சி பாஜக என அவர் கூறியதால் கட்சி தலைமை முடிவின்படி அவர் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ராணுவவீரர் லட்சுமணன் அவர்கள் அவருடைய உடல் மதுரைக்கு கொண்டுவரப்பட்டது. நான் மதுரை விமான நிலையத்திற்கு சென்று பார்த்த போது எல்லா தலைவர்களும் நிர்வாகிகளும் சூடாக இருந்தார்கள். அப்போது அதிமுக கட்சியை சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்கள் அங்கு இருந்தார்கள். அவர்களும் என் பக்கத்தில் வந்து பேசினார்கள். நான் அவர்களுடன் கேட்டேன் என்ன ஆச்சு என்ன பிரச்சனை என்று. அப்போது நிதியமைச்சர் வரும்போது சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது, இங்கு வருவதற்கு உங்களுக்கு என்ன தகுதி உள்ளது இங்கு ஏன் நிற்கிறார்கள் என்று நிதியமைச்சர் கேட்டார். அதனால் வாக்குவாதம் ஏற்பட்டது என அவர்கள் தெரிவித்தனர்.
வீடியோ எல்லாம் பார்த்து இருப்பீர்கள் ஒரு ராணுவ வீரரின் உடல் வரும்போது அஞ்சலி செலுத்தி அவருடைய இல்லத்திற்கு அனுப்பி வைப்பது நம்மளுடைய பொறுப்பு. இந்த நேரத்தில் அமைச்சர் தவறு செய்திருந்தாலும் அதை கேட்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது. அதனை மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் சொல்வோம்.
எல்லோரும் அமைதியாக இருங்கள் என்று சொல்லி என் பக்கத்தில் இருந்த தொண்டர்கள் அனைவரையும் நான் பிடித்து வைத்துக் கொண்டிருந்தேன். ஏனென்றால் நிலைமை மிக மோசமாக இருந்தது. அரசின் முறைப்படி நிதி அமைச்சர் அஞ்சலி செலுத்தி அங்கிருந்து கிளம்பி இருக்கிறார்.
சம்பவத்தை நாம் எல்லோரும் பார்த்தோம். அங்கு பத்திரிகை நண்பர்கள் எல்லோரும் இருந்தார்கள் அவர்களிடம் நான் பேசவில்லை நாம் முதலில் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று எல்லோரும் அமைதியாக இருக்க சொல்லி அங்கிருந்து கிளம்பி விட்டேன்.
வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எல்லாம் எடுத்து இருக்கிறார்கள் தொண்டர்கள். நம்முடைய சித்தார்த்தம்படி கலவரத்தை விரும்பக்கூடிய கட்சி பாஜக கிடையாது. நேற்று முக்கியமான இடத்தில் இருக்கக்கூடிய மாவட்டத்தின் அமைச்சர் பேசிய வார்த்தையை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. மக்கள் மன்றத்தில் கேள்வி கேட்க வேண்டும். நேற்று அது நடந்திருக்கக் கூடாது என்பது என்னுடைய கருத்து அது கட்சியினுடைய சித்தாந்தத்துக்கு எதிரானது.
இவ்வாறு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
Apple Link: https://apple.co/3yEataJ