அதிரடியில் இறங்கும் முதல்வர்; அண்ணாமலை திக்.. திக்.. திக்!

இந்தியாவில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ம் தேதி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து, நாட்டு மக்களிடம் பிரதமர் உரையாற்றுவது, கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மாநிலங்களை பொறுத்தவரை 1973ம் ஆண்டு வரை குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற நாட்களில் கவர்னர்கள் மட்டுமே கொடியேற்றுவது வழக்கமாக இருந்து வந்தது.

இந்த நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி கோரிக்கையை ஏற்று மாநில முதலமைச்சர்கள் சுதந்திர தினம் அன்று, கவர்னர்கள் குடியரசு தினம் அன்று கொடி ஏற்றும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

ரஜினி பேசிய அரசியல் – யாருடைய பிளான்?

இதையடுத்து கடந்த 1974ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி முதன்முறையாக தேசியக்கொடி ஏற்றினார். முதல்வராக ஆட்சியில் இருந்த சமயத்தில் கருணாநிதி 14 முறை, எம்ஜிஆர் 11 முறை, ஜெயலலிதா 16 முறை, எடப்பாடி பழனிச்சாமி 4 முறை தேசியக்கொடி ஏற்றி இருக்கின்றனர்.

இந்த வரிசையில் நாளை ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தில் முதல் முறையாக தமிழக முதல்வர்

தேசிய கொடியை ஏற்ற உள்ளார். இந்தியா தனது 25வது சுதந்திர தின விழாவை கொண்டாடியபோது கருணாநிதி தேசியக்கொடி ஏற்றி வைத்து திமுகவுக்கு பெருமை சேர்த்தார்.

இதன் பிறகு இந்தியா 50வது சுதந்திர தின விழாவை கொண்டாடியபோதும் கருணாநிதியே முதல்வராக இருந்ததால், தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். தற்போது

இந்தியா 75வது சுதந்திர தினத்தின்போது மு.க.ஸ்டாலின் முதல்வராக உள்ளதால் தேசியக்கொடி ஏற்றும் வாய்ப்பை பெற்றுள்ளதை திமுக பெருமையாக கருதுகிறது.

இந்த பெருமையை சுமந்தபடி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றி வைக்கும் மறுநாள் ஆகஸ்ட் 16ம் தேதி டெல்லிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

அப்போது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின்போது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்துகொண்டதற்கு நன்றி கூறும் முதல்வர் ஸ்டாலின் தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகளை பிரதமரிடம் எடுத்து வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சமீபகாலமாக பிரதமர் மோடிக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படும் நிலையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவத்தை பிரதரிடம் நேரில் கூறி முதல்வர் மு.க.ஸ்டாலின் முறையிடலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாஜக தலைவர் அண்ணாமலை பீதியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.