இந்தியா வல்லரசாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் சொல்லும் யோசனை

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற பாரதம் 2047 எனது பார்வை, எனது செயல் என்ற நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், “பன்முகத்தன்மை நிர்வகிக்கும் திறமைக்காக ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உற்று பார்க்கிறது.பல வரலாற்று நிகழ்வுகள் நமக்குச் சொல்லப்படாமலும் சரியான முறையில் கற்பிக்கப்படாமலும் உள்ளன. முக்கியமாக நாம் முதலில் நமது சொந்த ஞானத்தையும் அறிவையும் மறந்து விட்டோம். வடமேற்கு பகுதியில் இருந்து வந்த வெளிநாட்டு படையெடுப்பாளர்களால் நிலம் கைப்பற்றப்பட்டது. தேவையில்லாமல் சாதி மற்றும் பிற கட்டமைப்புகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்தோம். 

வேலைக்காக உருவாக்கப்பட்ட அமைப்புகள் மக்களுக்கும் சமூகங்களுக்கும் இடையே வேறுபாடுகளை உருவாக்க பயன்படுத்தப்பட்டன. ஜெர்மனி சக்தி வாய்ந்ததாக மாறியபோது ஹிட்லர் பிறந்தார். அமெரிக்கா வல்லமை பெற்றபோது, ​​ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான தாக்குதல் நடந்தது. இப்போது சீனா சக்தி வாய்ந்ததாக இருக்கும்போது, ​​​​உலகம் முழுவதும் என்ன நடக்கிறது என்பதை நாம் பார்க்கிறோம். 

ஆனால் இந்தியா சக்தி வாய்ந்ததாக இருக்கும்போது ​​​​அது உலகைக் காப்பாற்ற அதன் சக்திகளைப் பயன்படுத்துகிறது. இந்தியா முழு உலகிற்கும் ஒற்றுமை மற்றும் அகிம்சை மந்திரத்தை வழங்குகிறது. நாம் அனைவரும் அரசியலமைப்பு மற்றும் சட்டங்களை உண்மையாகக் கடைப்பிடிக்க வேண்டும். இந்திய நாகரிகம் 2,400 ஆண்டுகள் பழமையானது.

இந்தியா வளரச்சியடைந்த நாடாக மாற, இளைஞர்கள் தியாகங்களுக்கு தயாராக இருக்க வேண்டும். இந்தியா வல்லரசாக நாட்டின் அனைத்து மொழிகளும் தேசிய மொழியே என்பதை புரிந்துகொள்ள வேண்டும். நாட்டின் அனைத்து சாதியினரும் இந்தியர்களே என்பதை நாம் உணர வேண்டும்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.