தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக ஒருகாலத்தில் திகழ்ந்தவர் நடிகை மீனா. இவரது கணவர் அண்மையில் நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில், கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதி நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக நுரையீரல் கிடைக்காததால் சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த சம்பவம் திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் உள்பட அனைவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில், இன்று தன்னுடைய இன்ஸ்டாவில் முக்கிய பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் உடல் உறுப்பு தானம் மேற்கொள்வது என்ற முடிவை இன்று எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மீனா தனது இன்ஸ்டா பதிவில், “ஒரு உயிரை காப்பாற்றுவதை விட சிறப்பான செயல் வேறெதுவும் இல்லை. உயிர்களை காப்பாற்றுவதற்கு உடல் உறுப்பு தானம் சிறப்பான மனிதநேயமிக்க செயல்களில் ஒன்று. அதுவும், நோய்வாய் பட்டு உயிருக்கு போராடுபவர்களுக்கு கிடைக்கும் இரண்டாவது வாய்ப்பு. என்னுடைய கணவருக்கு இன்னும் நிறைய டோனர்கள் கிடைத்து இருந்தால் என்னுடைய வாழ்க்கையே மாறியிருக்கும். உடல் உறுப்பு தானம் கொடுக்கும் ஒருவரால் 8 பேரது உயிரை காப்பாற்ற முடியும்.
ஒவ்வொருவரும் உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்திருப்பார்கள் என நம்புகிறேன். இது வெறும் டாக்டர்கள், உடல் உறுப்பு தானம் வழங்குபவர்கள் மற்றும் பெறுவர்கள் இடையே மட்டுமானது அல்ல. அது உங்களுடைய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பரிச்சயமானவர்களின் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும்.
என்னுடைய உடல் உறுப்புகளை தானம் செய்வது என நான் இன்று உறுதி எடுத்துள்ளேன். நம்முடைய மரபு நீண்ட காலம் உயிர்ப்போடு இருப்பதற்கு இதுவே சிறந்த வழி” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, உடல் உறுப்பு தான நாளில் Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM