சென்னை அடுத்த கும்மிடிப்பூண்டி, ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம். கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின் போது, அமிர்தம் தேசிய கொடி ஏற்ற முன்வந்தபோது அவரது சாதியை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததால் குறிப்பிட்ட ஊராட்சியின் செயலாளர் சசிகுமார் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் ஒருவழியாக ஓய்ந்தது.
இந்த நிலையில், நம் நாட்டின் 75வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட இருக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதை கொண்டாடும் வகையில் ஒவ்வொருவர் வீட்டிலும் தேசிய கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
அமைச்சர் நாசர் ஜெயிலுக்கு செல்வது உறுதி – அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
இதன் அடிப்படையில், பல்வேறு தரப்பினர் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி வருகின்றனர். நடிகர்களில் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்டோர் தங்களது வீடுகளில் தேசிய கொடி ஏற்றியுள்ளனர்.
திரை பிரபலங்களை அடுத்து, நேற்று கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது வீட்டில் தேசிய கொடி ஏற்றினார். அதேபோல் பல்வேறு அரசு அலுவலகங்களில் தேசிய கொடியானது ஏற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் இன்று ஆய்வு மேற்கொண்ட தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வருகை தந்தார்.
பின்னர், ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தத்தை தேசியக்கொடி ஏற்ற வைத்தார். பின்னர் ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள் ஆகியோரிடம் கலந்துரையாடினார்.
இதைத் தொடர்ந்து சுதந்திர தினத்தன்று இந்த ஊராட்சியில் எந்த பிரச்சனையும் நடக்காமல் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதை தலைமை செயலாளர் இறையன்பு உறுதி செய்துவிட்டு சென்றார்.
தலைமைசெயலாளர் இறையன்பு திடீரென வருகை தந்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்து சென்றுள்ளதால் அரசு அதிகாரிகள் ஆடிப்போய் கிடக்கின்றனர்.