உத்தரகன்னடா : தான்டேலி நகரின், அலைட் பகுதியில் விர்னோலி ஆற்றங்கரையில் நடந்து சென்ற நபரை, முதலை தண்ணீருக்குள் இழுத்து சென்றது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.உத்தரகன்னடா தான்டேலியின் அலைட் பகுதியில் விர்னோலி ஆறு பாய்கிறது. இப்பகுதியில் வசிக்கும் சுரேஷ் வசந்ததேலி, 44, நேற்று ஆற்றங்கரை அருகில், நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஆற்றிலிருந்து வெளியேறிய முதலை, அவரை பிடித்து நீருக்குள் இழுத்து சென்றது.தகவலறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள், நீருக்குள் முதலை இழுத்து சென்ற சுரேஷ் வசந்ததேலியை, ‘ட்ரோன்’ கேமரா, படகு உதவியுடன் தேடி வருகின்றனர். உயர் அதிகாரிகள், முகாமிட்டுள்ளனர். இச்சம்பவம், மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
உத்தரகன்னடா : தான்டேலி நகரின், அலைட் பகுதியில் விர்னோலி ஆற்றங்கரையில் நடந்து சென்ற நபரை, முதலை தண்ணீருக்குள் இழுத்து சென்றது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.உத்தரகன்னடா தான்டேலியின்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்