செல்போன் அழைப்புகளுக்கு பதிலளிக்கும் போது "ஹலோவுக்கு" பதிலாக வந்தே மாதரம்- மராட்டிய மந்திரி உத்தரவு

மும்பை,

மராட்டிய முதல் மந்திரியாக பதவியேற்று 7 வார காலமாகிய நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை மராட்டிய மாநில அரசின் மந்திரிசபை விரிவாக்கம் நடந்தது. அதில் 18 பேர் மந்திரிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்த நிலையில், எந்தெந்த துறை யாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற அறிக்கையை இன்று மராட்டிய முதல் மந்திரி அலுவலகம் வெளியிட்டது.

இதில் வனத்துறை மற்றும் கலாச்சார துறை மந்திரியாக பாஜகவின் சுதிர் முங்கந்திவார் நியமிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இனி அரசாங்க அதிகாரிகள் செல்போன் அழைப்புகளை எடுத்ததும் ஹலோவிற்கும் பதில் வந்தே மாதரம் என கூற வேண்டும் என தெரிவித்துள்ளார். இதற்கான அதிகாரபூர்வ உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பாக சுதிர் முங்கந்திவார் கூறுகையில், “ஹலோ ஒரு ஆங்கில வார்த்தை, அதை விட்டுவிடுவது முக்கியம். வந்தே மாதரம் என்பது வெறும் வார்த்தையல்ல, ஒவ்வொரு இந்தியனும் அனுபவிக்கும் உணர்வு.

நாம் சுதந்திரத்தின் 76 வது ஆண்டில் நுழைகிறோம். நாம் சுதந்திரத்தை கொண்டாடுவோம். எனவே அதிகாரிகள் வணக்கம் என்பதற்கு பதிலாக தொலைபேசியில் வந்தே மாதரம் என்று சொல்ல விரும்புகிறேன்.” என தெரிவித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.