இத்தாலியின் நியோஸ் விமான சேவை நிறுவனம் கொழும்பு மற்றும் இத்தாலிக்கு இடையில் வாராந்தம் விமான சேவைகளை ஆரம்பிப்பதற்குத் தயாராகியுள்ளது.
இதற்கமைவாக வாரத்தில் 3 விமான சேவைகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்தாலி சிவில் விமான சேவை அதிகார சபை இதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.