புதுடில்லி : பறவைகள் மற்றும் விலங்குகளால் விமானங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க விமான நிலையங்களுக்கு, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் வழிகாட்டு நெறிமுறைகளை அனுப்பியுள்ளது.விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் உயரே எழும் நேரத்தில் பறவைகள் விமானத்தின் மீது மோதும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. அதேபோல் ஓடுதளத்திலும் சில விலங்குகளால் விமானப் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
இவற்றை தடுக்க சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் அனுப்பியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியிருப்பதாவது: விமான நிலைய ஓடுதளங்களில் வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். அவற்றின் நடமாட்டத்தை தடுக்க, வழக்கமான பாதையை தவிர மற்ற பகுதிகளிலும் ரோந்து செல்ல வேண்டும். அதேபோல், விமானிகளுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும். இதுதொடர்பாக எடுத்துள்ள நடவடிக்கை குறித்து விமான நிலைய இயக்குனர்கள் மாதந்தோறும் 7ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement