ரூ. 17 கோடியில் நீச்சல் குளம்! புதிய சர்ச்சையில் ரிஷி சுனக்


பிரித்தானிய பிரதமர் போட்டியாளர் ரிஷி சுனக் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ரூ. 17.5 கோடியில் புதிய நீச்சல் குளத்தை காட்டியுள்ளார்.

பிரித்தானியாவின் அடுத்த பிரதமருக்கான போட்டியில் லிஸ் டிரஸை எதிர்த்து ரிஷி சுனக் போட்டியிடுகிறார்.

பிரித்தானிய பிரதம மந்திரி தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கும் குறைவாகவே உள்ள நிலையில், இந்திய வம்சாவளி போட்டியாளரான ரிஷி சுனக் மீண்டும் தனது வாழ்க்கை முறை குறித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அறிக்கைகளின்படி, சுனக் தனது மாளிகையின் உள்ளே ஒரு ஆடம்பரமான நீச்சல் குளம் அமைக்க கிட்டத்தட்ட ரூ. 17.5 கோடி செலவு செய்துள்ளார். பிரித்தானியாவின் பல பகுதிகள் வறட்சி மற்றும் கடுமையான வெப்ப அலையுடன் போராடும் நேரத்தில் இந்த செய்தி வெளிவந்து சர்ச்சையாக மாறியுள்ளது.

ரூ. 17 கோடியில் நீச்சல் குளம்! புதிய சர்ச்சையில் ரிஷி சுனக் | Rishi Sunak Build Rs17 Crores Pool Amid Drought Uk

ரிஷி சுனக், இங்கிலாந்தின் North Yorkshire பகுதியில் உள்ள தனது மாளிகையில் ஒரு புதிய நீச்சல் குளத்திற்காக 400,000 பவுண்டுகள் (இலங்கை ரூ. 17.46 கோடி) செலவிட்டதாக தி இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

சுனக், அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் இந்த வசதியான வீட்டில் தங்கள் வார இறுதி நாட்களைக் கழிக்கிறார்கள்.

டெய்லி மெயில் அறிக்கையின்படி, பிரித்தானியாவின் முன்னாள் நிதியமைச்சரான சுனக் அதே மாளிகையில் ஒரு உடற்பயிற்சி கூடம் மாறும் டென்னிஸ் மைதானத்தையும் கட்டி வருகிறார்.

ரூ. 17 கோடியில் நீச்சல் குளம்! புதிய சர்ச்சையில் ரிஷி சுனக் | Rishi Sunak Build Rs17 Crores Pool Amid Drought Uk

நீச்சல் குளத்தின் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதை அப்பகுதியின் வான்வழி காட்சிகள் காட்டுகிறது.

இது சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்கும் போது சுனக் நீச்சல் குளம் கட்டியதற்காக பலர் விமர்சித்துள்ளனர்.

எரிசக்தி செலவுகள் அதிகரித்து வருவதால் நகரத்தில் உள்ள பொது நீச்சல் குளங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதும் இந்த சர்ச்சை தீக்கு எரிபொருளை சேர்க்கிறது.

ரிஷி சுனக் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கள் வாழ்க்கை முறை குறித்து சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறை அல்ல. கடந்த மாதம், அக்ஷதா மூர்த்தி விலையுயர்ந்த பாத்திரங்களில் தேநீர் பரிமாறுவதைக் கண்டு பொதுமக்கள் கோபத்தை எதிர்கொண்டார்.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.