செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக கூடுவாஞ்சேரி மதுவிலக்கு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்த கொண்டிருந்த ஒருவரையும் கையும் களவுமாக போலீசார் பிடித்துள்ளனர்.
இதையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், பொத்தேரி பகுதியை சேர்ந்த பாபு(51) என்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து பாபுவை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.